CCMC NEWS 14- 06.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.61க்குட்பட்ட நலவாழ்வு மைய வளாகத்தில் ரூ.142.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (06.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, கட்டுமான பணிகளை விரைவாக முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திருமதி.கவிதா, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.