CCMC News - 17.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.97க்குட்பட்ட சிட்கோ, ஹவுசிங்போர்டு பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறை வழங்கி, அப்பகுதியிலுள்ள செடி, கொடிகளை அகற்றி, சாலையை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 17.11.2022.