Coimbatore Corporation - 3News 22.06.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர் வார சந்தையில் கடைகள் கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி, உதவி பொறியாளர்கள் திரு.கமலக்கண்ணன், திரு.சக்திவேல், சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 22.06.2022.