Skip to content
CCMC NEWS 1 -19.03.2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (19.03.2024) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி அவர்கள் (20-கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 120 கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி) நேரில் பார்வையிட்டார். உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மேற்பார்வையாளர்கள் திருமதி.நிர்மலா, திரு.சிவசாமி ஆகியோர் உள்ளனர்.