Skip to content
CCMC NEWS 10 - 30.09.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் சூயஸ் திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் பிரதான குழாய்களுக்கு பொருத்துவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள DI 600mm, 300mm Slice வால்வு, Air வால்வு மற்றும் Butterfly வால்வு ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.09.2024.