ccmc news 19.09.2026

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இன்று (19.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்., நிறுவனத்தின் மூலமாக சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் பெறப்பட்ட 43 எண்ணிக்கையிலான மின்கல இயக்க வாகனங்களை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு கொடியசைத்து, துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ர.சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்., நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.தேவானந்த் விஜயன் உட்பட பலர் உள்ளனர்.