CCMC News 2 24.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில், இலட்சுமி நகர் முதல் கொடிசியா சாலை வரை இணைப்புச் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் நகரமைப்பு அலுவலர் திரு.தாமோதரன், உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.இளங்கோவன்(பொ), உதவி நகர திட்டமிடுநர் திரு.சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், உதவி பொறியாளர் திரு.ஃபர்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 28.07.2026.