CCMC NEWS 26.11.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பெரியகுளத்தின் தென்கரை பகுதியில், (தமிழ்நாடு அரசு நிதியின் கீழ் ரூ.72.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தி/ள்.Swiss Agency for Development and Corporation ரூ.72.50 இலட்சம் மதிப்பீட்டிலும், மொத்தம் ரூ.1.45 கோடி) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 154 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், துவக்கி வைத்தார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமைப்பொறியாளர் திரு.சுரேஷ்குமார், மேற்பார்வை பொறியாளர் திரு.சதீஷ்குமார், நிதி மற்றும் வரிவிதிப்பு குழு தலைவர் திருமதி.வி.ப.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் திரு.அகமது கபீர், திரு.செந்தில்குமார், தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

