ccmc news 3 31.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், இன்று (31.07.2026) மேற்கு மண்டலம் வார்டு எண்.36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணியின் கீழ், பொதுமக்களிடமிருந்து வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கி சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் திருமதி.நர்மதா, மாமன்ற உறுப்பினர் திருமதி.குமுதம், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.ராஜேந்திரன், திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.