Skip to content
CCMC NEWS 9 - 30.09.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.48க்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் 15வது மானிய நிதி குழு திட்டத்தின்கீழ், ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தின் புனரமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.09.2024.