CCMC NEWS1 22.7.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்.நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பம் அளித்திருந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான உடனடி ஆணையினை வழங்கினார். உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், துணை ஆணையாளர் திருமதி.அ.சுல்தானா, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.தொண்டாமுத்தூர் ரவி, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.சம்பத், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர்கள் திரு.ராஜேஸ்வேணுகோபால், திரு.ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 22.07.2025.