CCMC NEWS2 17-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (17.06.2025) கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர், மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்டணமில்லா நீட் நுழைவுத்தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்த மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், டைம்ஸ் இன்ஸ்டியூட் இயக்குநர் திரு.சிவகுமார், பள்ளி தலைமையாசியர்கள், மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.