CCMC NEWS 1- 05.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (05.09.2024), மத்திய மண்டலம் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, செல்வி.எஸ். இதழ்யஸ்ரீ தடகளப் போட்டியில் கலந்து கொண்டு இளையோர் தடகளப்போட்டிக்கும் மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் செல்வி.எஸ்.மோனிஷா மற்றும் செல்வி.ஐ.ஜாய்ஸ்மின் ஆகியோர் கபடிப் போட்டியில் பங்கேற்று மண்டல அளவிலான நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் வாழ்த்து பெற்றார்கள். மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென மாணவியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வாழ்த்து தெரிவித்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா இராமநாதன், மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன் ஆகியோர் உள்ளனர்.