CCMC NEWS 18-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.20 மற்றும் 30-க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலைகள், பாரதி நகர் சாலைகள் உட்பட 16 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ.142.13 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், இன்று (18.06.2025) துவக்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி.சரண்யா, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.