CCMC NEWS 24.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2025-2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், தலைமையில் இன்று (24.03.2025) நடைபெற்றது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர்கள் திருமதி.அ.சுல்தானா, திரு.த.குமரேசன், மண்டல குழுத்தலைவர்கள் திரு.வே.கதிர்வேல் (வடக்கு), திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திருமதி.மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), திரு.மு.ராஜேந்திரன் (நியமனக்குழு), ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.