CCMC NEWS 3 - 12.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனாலோகு, நகர திட்டமிடுநர் திரு.குமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.