CCMC NEWS 4- 12.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, சாஸ்திரி வீதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்களை சீரமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனாலோகு, நகர திட்டமிடுநர் திரு.குமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 12.09.2024.