CCMC NEWS2 1.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் முதற்கட்டமாக ரூ.167.25 கோடி மதிப்பீட்டில், சுமார் 45.00 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், உதவி ஆணையர்கள் திரு.செந்தில்குமரன், திரு.துரைமுருகன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர்கள் திருமதி.ஹேமலதா, திரு.ராஜேஸ் கண்ணா, திரு.கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், உதவி பொறியாளர்கள் திரு.கமலக்கண்ணன், திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.