CCMC NEWS2 23.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.50க்குட்பட்ட நவ இந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற " நான் முதல்வன் - கல்லூரிக் கனவு 2025" என்ற உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு நிகழ்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு உயர்க்கல்விக்கான கையேடுகளை வழங்கினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், கிழக்கு மண்டல குழுத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.ஈரோடு மகேஷ், உதவி ஆணையர் திரு.முத்துசாமி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் திருமதி.சரஸ்வதி கண்ணையன், முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி, மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், அனைவருக்கும் ஐஐடி இயக்கத்தின் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திருமதி.கீதா சேரலாதன், மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.