CCMC NEWS2 3-7-2025
.jpg)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்று (03.07.2025) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளிக்காட்சி வாயிலாக (Off-line) கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.63க்குட்பட்ட திருச்சி சாலை, ஒலம்பஸ் பகுதியில் கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், பார்வையிட்டனர். உடன் துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், மருத்துவ சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.சுமதி, மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனாலோகு, பொது சுகாதார குழு தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்தி முருகன், நகர்நல அலுவலர் மரு.மோகன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன்(மத்தியம்), திரு.துரைமுருகன்(மேற்கு), செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.முனியம்மாள், திருமதி.காயத்திரி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.நடராஜன், மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.