CCMC NEWS7 10.4.2025

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.61-க்குட்பட்ட சிங்காநல்லூர் குளத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2MLD சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.தொண்டாமுத்தூர் ரவி, மண்டல குழுத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகர தலைமை பொறியாளர் (பொ) திரு.முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் (10.04.2025)