COIMBATORE CORPORTION NEWS - 05.09.2024

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (05.09.2024) கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருஉருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் திரு.வி.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கா.இரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., துணை மேயர் திரு.ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.